பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய்யின் கோட் ஆடியோ வெளியீட்டு விழா- தமிழ்நாட்டில் இல்லை, வேறமாதிரி பிளான்
விஜய்யின் கோட்
அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டரில் விஜய் நடிக்க படு மாஸாக தயாராகி வரும் படம் தான் கோட், Greatest Of All Time.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு படப்பிடிப்புகளை சரியான திட்டமிடுதலுடன் நடத்தி வருகிறார்.
படத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார், சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
விஜய்யை தாண்டி பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடிக்கிறார்கள்.
சூப்பர் பிளான்
விஜய்யின் 68வது படமான கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது, படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் டைம் டிராவலை மையமாக வைத்து இப்பட கதை உருவாகி வருவதா சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மாஸாக தயாராகி வரும் கோட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது, தகவலை கேட்டதும் செம தூள் மாஸாக இருக்குமே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஆனால் உண்மையில் ஆடியோ வெளியீடு தமிழ்நாட்டில் நடக்கிறதா அல்லது வெளிநாட்டிலா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
