நடிகர் விஜய்யின் Goat பட வியாபாரத்திற்கு இப்படியொரு சோதனையா?- அதிர்ச்சி தகவல்
விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் நடிப்பில் இப்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் கோட் The Greatest Of All Time.
அஜித்துடன் மங்காத்தா படத்தை எடுத்த முடித்ததில் இருந்து வெங்கட் பிரபுவை சுற்றிய ஒரு கேள்வி எப்போது விஜய்யுடன் இணைவீர்கள் என்று தான்.
அவரும் கேள்வி கேட்பவர்கள் அனைவரிடமும் விஜய் அவர்கள் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக படம் எடுக்க தயார் என வெங்கட் பிரபு கூறி வந்தார்.
TRPயில் டாப்பில் ஓடும் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுத்த புதிய நடிகர்- இனி அதுக்கு பஞ்சமே இல்லை
தற்போது தளபதியும், வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கொடுக்க தற்போது கோட் படம் தயாராகி வருகிறது.
பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் லைலா என நட்சத்திர பட்டாளமே விஜய்யுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
பட வியாபாரம்
எப்போதுமே விஜய்யின் படங்களின் வியாபாரம் படத்துக்கு படம் அதிகமாக இருக்கும். லியோ பட வெற்றியை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
எனவே படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிக்கையாளர், தயாரிப்பு குழு சொல்லும் விலைக்கு படத்தை வாங்க யாருமே முன்வரவில்லையாம்.
எனவே தயாரிப்பு குழு இப்போதைக்கு பட செலவை பார்த்து செய்ய வேண்டும் என அதற்கான வேலைகளில் உள்ளார்களாம். இதுவரை ஆடியோ ரைட்ஸ் மட்டுமே விலைபோனதாக கூறியுள்ளார்.