மகனால் நடிகர் விஜய்க்கு பெருமை தான்- மகிழ்ச்சியாக கூறிய பிரபலம்
நடிகர் விஜய்
தனது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மூலம் சினிமாவில் நுழைந்து சாதித்தவர் நடிகர் விஜய். தொடர்ந்து அப்பா படங்களில் நடித்தவர் சில படங்களுக்கு பின்பே மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்போது அவரின் வளர்ச்சி எங்கேயோ சென்றுவிட்டது, சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான லியோ தாறுமாறு வசூல் வேட்டை நடத்தியிருந்தது, ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
இதற்கு நடுவில் தான் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகும் செய்தி வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்க தனது முதல் படத்தை சஞ்சய் இயக்க இருக்கிறார். அந்த புதிய படம் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
பிரபலத்தின் பேட்டி
நடிகர் பிரபுதேவா ஒரு பேட்டியில், விஜய்யை ஒரு படத்தில் இயக்கியிருக்கிறேன், அவரது மகன் இப்போது படம் இயக்க வருகிறார். ஜேசன் சஞ்சயின் வளர்ச்சியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்தால், அவருடைய அப்பா விஜய் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். மகனை நினைத்து அவர் பெருமை பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பேசியுள்ளார்.