அடேங்கப்பா விஜய்யின் ஜனநாயகன் எத்தனை ஆயிரம் திரையில் வெளியாகிறது தெரியுமா?... தளபதி மாஸ்
ஜனநாயகன்
அடுத்த வாரம் இந்த நேரம் தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகிறது, 2026 பொங்கலுக்கு இந்த கொண்டாட்டம் இருந்திருக்க வேண்டும் ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆனது.
ஆனால் பரவாயில்லை தளபதி விஜய் படம் எப்போது ரிலீஸானும் திருவிழா தான்.

பொங்கலுக்கு வந்திருந்தால் தளபதி விஜய், ஆனால் இப்போது முதலமைச்சர் விஜய்யின் படமாக நீண்ட நாட்களாக எப்போது ரிலீஸ் எப்போது ரிலீஸ் என ரசிகர்களால் கேட்கப்பட்ட ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகிறது.
வரும் ஜுலை 23ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாக இருக்கிறது.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எந்த ஒரு தமிழ் படத்திற்கும் நடக்காத அளவிற்கு மலேசியாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக நடைபெற்றது.

ரிலீஸ் பிளான்
முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜுலை 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து சூப்பர் சூப்பர் தகவல்கள் வருகின்றன.

இந்தியாவைத் தவிர்த்து உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாம். உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரைகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா தெரிவித்திருக்கிறார்.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu