26 வருடங்களை எட்டிய விஜய்யின் சூப்பர் ஹிட் காதலுக்கு மரியாதை படம்- மொத்தம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
காதலுக்கு மரியாதை
விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான படம் காதலுக்கு மரியாதை.
1997ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இப்படத்தை வெளியிட்ட படக்குழுவினருக்கு ஒரு பயம் இருந்தது, அது என்னவென்றால் இன்னும் 2 வாரத்தில் பொங்கல் ரிலீஸ் படங்கள் வருமே, அதனால் பாக்ஸ் ஆபிஸ் பாதிக்குமா என்ற பயம் இருந்துள்ளது.
மார்பக புற்றுநோய், வெட்டி எடுத்த மருத்துவர்கள்- சோகமான சம்பவம் குறித்து எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா
அதேபோல் 1998ம் ஆண்டு பொங்கலுக்கு சரத்குமாரின் மூவேந்தர், முரளியின் காதலே நிம்மதி, நெப்போலியனின் கிழக்கும் மேற்கும், மம்முட்டியின் மறுமலர்ச்சி, பிரபு தேவாவின் நாம் இருவர் நமக்கு இருவர், பிரபுவின் பொன்மனம், விஜயகாந்த்தின் உளவுத்துறை, கார்த்திக்கின் உதவிக்கு வரலாமா என பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
பட வசூல்
ஆனால் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தின் வசூலை எந்த படமும் தடுக்கவில்லை, தொடர்ச்சியாக அப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஒளிபரப்பாகி வந்தது.
படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ரூ. 2 கோடி வசூலில் எடுக்கப்பட்ட காதலுக்கு மரியாதை படம் அப்போதைய காலகட்டத்தில் ரூ. 16 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.