விஜய்யின் மறைந்த தங்கை வித்யா, இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வீடியோ இதோ
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய், தற்போது அதிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாடு முடிந்த நிலையிலும், அதை பற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் விஜய் குறித்துதான் பேசப்பட்டு வருகிறது.
விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் கடைசி படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் தங்கை வித்யா
நடிகர் விஜய் உடன் பிறந்த தங்கை வித்யா உடல்நல குறைவு காரணமாக சிறு வயதிலேயே காலமானார். அவருடைய மறைவு விஜய்யை பெரும் அளவில் பாதித்தது. இதை பற்றி விஜய்யின் தாய் ஷோபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சுக்ரன் படத்தில் கூட விஜய்யின் தங்கை வித்யாவின் புகைப்படத்தை காட்டியிருப்பார்கள். அதே போல், வேலாயுதம், திருப்பாச்சி, சிவகாசி என தங்கை செண்டிமெண்ட் கொண்ட திரைப்படங்களில் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மறைந்த தங்கை வித்யா தற்போது உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார் என்பதை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். வித்யா தற்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என ரசிகர் பகிர்ந்து இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..