விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது?- படக்குழு தரப்பில் வந்த தகவல்
விஜய்யின் லியோ
இந்த வருடம் வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைக்க படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ லலித் தயாரிக்கிறார்கள். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை இப்படத்தின் முதல் சிங்கிள் விஜய் பாடிய நான் ரெடி வரவா என்ற பாடல் வெளியாக இருக்கிறது.
லியோ இசை வெளியீடு
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் லலித்திடம் படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இசை வெளியீடு எங்கே, எப்போது என்பது 15 நாட்களில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.