விஜய்யின் லியோ படத்தில் ஒரேஒரு காட்சிக்கு இத்தனை கோடி செலவா?- சூப்பர் தகவல்
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க படு சூப்பராக தயாராகி வருகிறது லியோ திரைப்படம். லலித் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன் கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
குறிப்பாக விஜய், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய மூவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மாஸ் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சூப்பர் தகவல்
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற Hyena Sequence காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சியின் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் மொத்தம் ரூ. 15 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமாம்.