ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டிவரும் விஜய்யின் லியோ- அதற்குள் இத்தனை கோடி வசூலாகிவிட்டதா?
விஜய்யின் லியோ
விஜய்யின் லியோ தான் இப்போது தமிழக ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் ஒரே படம்.
வாரிசு திரைப்படம் வசூலிலும், விமர்சனத்திலும் பெரிய அடியை சந்திக்க இந்த படம் கண்டிப்பாக மாஸ் காட்டும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.
அதற்கு ஏற்றார் போல் படம் குறித்து ஒவ்வொரு தகவலும் மாஸ் காட்டுகிறது, இந்த படத்தில் கமல்ஹாசன் Voice Over கொடுத்துள்ளார் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது.
படத்தை பார்ப்பதற்கு முன்பு தளபதியை இசை வெளியீட்டு விழா மூலம் காண ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள், ஆனால் நிகழ்ச்சி சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
நிகழ்ச்சி ரத்து செய்தியே படத்திற்கு பெரிய புரொமோஷனாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.

ப்ரீ புக்கிங்
லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய்-த்ரிஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடி சேர அனிருத் இசையமைப்பில் படம் வெளியாகிறது.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது. தற்போது வரை ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 10 கோடி மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri