மாற்று திறனாளி ரசிகருக்கு விஜய் செய்த விஷயம்! குவியும் பாராட்டு.. வைரல் போட்டோ

By Parthiban.A Dec 13, 2022 12:30 PM GMT
Report

விஜய்

நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அவர் நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அவரது ரசிகர்கள் பல்வேறு விதங்களில் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

முதலில் குடும்பத்தை பாருங்க, அடுத்து தொழிலை பாருங்க.. அதன் பின் சம்பளத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தை மக்கள் நல பணிகளுக்கு செலவு செய்யுங்கள், கடன் வாங்கி எதையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார் விஜய்.

தற்போது சென்னை பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டு அதன் பின் விஜய் அவர்கள் உடன் பேசி போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மாற்று திறனாளி ரசிகருக்கு விஜய் செய்த விஷயம்! குவியும் பாராட்டு.. வைரல் போட்டோ | Actor Vijay Lifts Disabled Fan In His Arms

மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிய விஜய்

ஒவ்வொரு ரசிகருடனும் விஜய் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க வந்தபோது அவரை தனது கையில் தூக்கி வைத்து போஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்.

சில நடிகர்கள் ரசிகர்களுக்கு கைகொடுக்க கூட தயங்கும் நிலையில் விஜய் இப்படி தூக்கி வைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US