10ம் வகுப்பில் நடிகர் விஜய் வாங்கிய மார்க்.. எவ்வளவு பாருங்க
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அவரது அப்பா எஸ்ஏசி முன்னணி இயக்குனர் என்பதால் சின்ன வயதில் இருந்தே விஜய்க்கு நடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்திருக்கிறது.
ஆனால் படித்துமுடித்துவிட்டு தான் சினிமாவுக்குள் வர வேண்டும் என அப்பா எஸ்ஏசி கூறிவிட்டார். அதனால் படிப்பிலும் விஜய் கவனம் செலுத்தி இருக்கிறார்.
10ம் வகுப்பு மார்க்
நடிகர் விஜய் 10 வகுப்பில் பெற்ற மார்க் விவரம் வெளியாகி இருக்கிறது. சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10 வகுப்பு படித்து இருக்கிறார்.
1100 க்கு அவர் 711 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 155/200, கணக்கில் 95/200, ஆங்கிலத்தில் 133/200, அறிவியல் 206/300, சமூக அறிவியல் 122/200 மதிப்பெண்களை அவர் பெற்று இருக்கிறார்.
அதனால் அவர் பள்ளியில் ஆவரேஜ் மாணவராக தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
You May Like This Video