விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே, எப்போது?- வெளிவந்த விவரம்
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி சென்னையில் நடந்து வந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வருகிறது. படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், கதிர், மடோனா செபஸ்டின், ஜனனி போன்ற நடிகர்கள் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆடியோ வெளியீடு
விஜய்யின் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தமிழகத்தை நடக்கவில்லை என்றும், மலேசியாவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால் இந்த ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து தூக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரம்- ரசிகர்கள் ஷாக்