கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படம் ரீ-ரிலீஸ்- எந்த படம் தெரியுமா?
கில்லி படம்
முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது.
அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி.
தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
ரிலீஸ் ஆன நேரத்திலேயே முதல் ரூ. 50 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை பெற்றது.
மற்றொரு படம்
விஜய்யின் கில்லி படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் நிலையில் இப்போது தளபதி ரசிகர்களுக்காக இன்னொரு சூப்பர் சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது.

தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ
கில்லி படம் வெளியாகி இதுவரை ரூ. 17 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் விஜய்யின் இன்னொரு படம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
வேறு எந்த படமும் விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியாகி நல்ல ஹிட்டடித்த குஷி படம் தான் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.