நடிகர் விஜய்யின் ரீல் தங்கைக்கு பிறந்த அழகிய மகள்.. இருவரும் இணைந்து வெளியிட்ட புகைப்படம்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் தங்கை வித்யா தனது சிறு வயதிலேயே உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பதை நாம் அறிவோம்.
இதனால், நடிகர் விஜய்யின் பல படங்களில் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும். அந்த காட்சியை காணும்போதெல்லாம் நமக்கு கண்கலங்கும்.
மகளுடன் நடிகை சரண்யா மோகன்
அப்படி நம்மை கண்கலங்க வைத்த அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படங்களில் ஒன்று தான் வேலாயுதம். இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை சரண்யா நடித்திருந்தார்.
இவர் வேலாயுதம் படத்தை தவிர்த்து யாரடி நீ மோஹினி, வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சரண்யா மோகன் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

