தனது ஹிட் பாடலுக்கு குழந்தைகளுடன் பீஸ்ட் படப்பிடிப்பில் நடனம் ஆடிய விஜய்- இதுவரை பார்த்திராத வீடியோ
தமிழ் சினிமா தலையில் வைத்துகொண்டாடும் ஒரு பெரிய நடிகர் விஜய். ரஜினிக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துவருவது இவரது படங்கள் தான்.
பீஸ்ட் வசூல்
இப்போது விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சென்னையில் இரண்டு நாள் முடிவில் ரூ. 3.57 கோடி வரை வசூலித்திருக்கிறது.
உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு வசூல் என்ற விவரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தளபதி போட்ட நடனம்
இந்த நிலையில் டுவிட்டரில் தளபதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் நடிகரும், நடன கலைஞருமான சதீஷ் மற்றும் இரண்டு சின்ன குழந்தைகளுடன் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் விஜய்.
அந்த வீடியோ தான் இப்போது டுவிட்டரில் செம வைரலாகி வருகிறது.
Exclusive: Thalapathy OffScreen #VaathiComing step with @dancersatz & Kid #Harshitha ❤️ #Beast @actorvijay pic.twitter.com/4jvv0DJaAM
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) April 15, 2022