விஜய் - சங்கீதாவின் திருமண புகைப்படங்கள்.. பலரும் பார்த்திராத போட்டோஸ் இதோ
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகனில் நடித்து முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்கிவிட்டார்.
சமீபத்தில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக இல்லை என்றும் பல விதமான வதந்திகள் பரவின. ஆனால், அவை யாவும் உண்மையில்லை. தனது மகளின் படிப்பிற்காக சங்கீதா வெளிநாட்டில் இருந்தார், தற்போது மீண்டும் இங்கு வந்துவிட்டார் என கூறப்பட்டது. இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நேற்று விஜய் - சங்கீதாவின் திருமண நாள் ஆகும். இந்த நிலையில், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..


