சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அவமானம், கண்கலங்கிய பிரபலம்.. முதல்முறையாக கூறிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வனாக கொண்டாடப்பட்டு வருபவர்.
இப்போது இவரது நடிப்பில் மகாராஜா என்ற படம் வெளியாகியுள்ளது, இது விஜய் சேதுபதியின் 50வது படமாம், இதனால் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
படமும் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது, நாளுக்கு நாள் வசூலும் அதிகரித்து வருகிறது.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி மக்களை அழ வைத்துவிட்டார், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
எமோஷ்னல் பதிவு
இந்த நிலையில் மகாராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி தான் முதன்முதலில் நடித்த சீரியல் குறித்தும், அதில் கிடைத்த அனுபவம் பற்றியும் பேசியுள்ளார்.
அதில் அவர், சன் தொலைக்காட்சியில் 2006ம் ஆண்டு ஒளிபரப்பான பெண் சீரியல் எத்தனை பேருக்கு நியாபகம் உள்ளது என தெரியவில்லை. சீதா, ரேவதி, டெல்லி கணேஷ் என பலர் நடித்திருந்தார்கள்.
அதில் நடிக்கும் போது உதவி இயக்குனர்கள் என்னை திட்டுவார்கள், அப்போது நான் பயந்து பயந்து தான் நடித்துக் கொண்டிருந்தேன், ஆனால் இயக்குனர் எனக்காக அவர்களை திட்டுவார். அவனை திட்டாதீர்கள், எப்படி நடிக்க வேண்டும் என கற்றுக்கொடுங்கள் என்பார்.
என்னிடம் சீதா மேடம் நடிப்பை கவனி அவங்க கண்களில் நடிப்பை எப்படி காட்றாங்க என பார்க்க சொன்னார். அந்த சீரியலில் நடிக்கும்போது என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் போகும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், பல இடங்களில் நான் அவமானப்பட்டு இருக்கிறேன்.
அந்த நேரத்தில் என்னையே நான் திட்டிக்கொண்டு அழுதிருக்கிறேன். நானும் மனுஷன் தானே? நானும் மற்றவர்களைப் போலத்தான்..
ஏன் நமக்கு மட்டும் இது நடக்கவில்லை? ஏன் நமக்கு மட்டும் ஏமாற்றம் நடக்கிறது என்றெல்லாம் பலமுறை நினைத்திருக்கிறேன் என எமோஷ்னலாக பழைய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.