தனது மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி.. காரணம் என்ன தெரியுமா?
விஜய் சேதுபதி
கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 4 - ம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளது.
என்ன தெரியுமா?
இந்நிலையில், பீனிக்ஸ் பட விழாக்களில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகின. அதனை வெளியிட்டவர்களில் சிலரை அழைத்து பேசிய சூர்யா தரப்பு, அந்த வீடியோக்களை நீக்கச் சொல்லி மிரட்டியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தம்பிகள் தெரியாமல் பண்ணிருப்பாங்க. எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.