நடிகர் விஜய் அணிந்திருக்கும் செருப்பின் Brand இதுதானா?- விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய்
விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் படம் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் இல்லை. இப்போது இவர் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.
படத்தை காண ரசிகர்களும் படு ஆர்வமாக உள்ளார்கள்.
இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக், பாடல்கள் எள ரிலீஸ், இடையில் படப்பிடிப்பு தள வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது.
ரசிகர்கள் சந்திப்பு
விஜய் ரசிகர்களை தனது கம்பெனியில் சந்தித்து புகைப்படம் எடுப்பது வழக்கம், அதுமட்டும் இல்லாமல் ஸ்பெஷலாக பிரியாணியும் போடுவார். அண்மையில் அப்படி ரசிகர்கள் சந்திப்பு நடக்க அதில் ஒரு மாற்றுத் திறனாளியும் வந்துள்ளார்.
அவரை பார்த்த விஜய் தனது கையில் அவரை தூக்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார், இப்போது அந்த போட்டோ செம வைரலாகி வருகிறது.
அதிலும் ரசிகர்கள் விஜய் அணிந்திருக்க காலணி குறித்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த காலணி Birkenstock என்ற நிறுவனத்துடைய Mayari Birko – Flor என்ற மாடல் காலனியாம். அதன் விலை ரூ. 5,999 என்று கூறப்படுகிறது.