நடிகர் விஜய்
என் நெஞ்சில் குடியிருக்கும் என மைக் முன் விஜய் பேசும் அந்த ஒரு மேடை பேச்சக்காகவே ரசிகர்கள் இன்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது, ஆனால் அது படு சிம்பிளாக நடந்தது.
தற்போது வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் நடன இயக்குனர்கள் ஜானி, ஷோபி மாஸ்டர், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம் என பிரபலங்கள் பேசி வருகிறார்கள்.

விஜய்யின் பேச்சு
ரசிகர்கள் சில வருடங்களாக காத்துக் கொண்டிருந்த விஜய்யும் மைக் முன் பேச தொடங்கிவிட்டார். படத்தில் நடித்த நடிகர்கள் பற்றி பேசிய பின் அவர் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக என்ன பேசினார் இதோ..
"பிரச்சனை வரும்.. நமக்கு எதிர்ப்பு வந்தால் நாம் காரெக்ட்டா போய்ட்டு இருக்கோம்னு தான் அர்த்தம். தேவையான விமர்சனம் மற்றும் தேவையில்லாத எதிர்ப்பு ஆகியவை தான் நம்மை ஓட வைக்கும்."
"முன்னேறணும்னா ஒரு போட்டியாளர் கண்டிப்பா இருக்கனும், ஆனா அந்த போட்டியாளரும் நீங்களாகவே இருக்க வேண்டும்., உங்களோடே போட்டி போடுங்க, உங்களுக்கே போட்டியா இருங்க."
”அன்பு மட்டுமே இந்த உலகத்தை ஜெயிக்கும் ஆயுதம். விட்டுக்கொடுக்கும் உறவுகள் மற்றும் நம்மை எப்போதும் விட்டுக்கொடுக்காத நண்பர்கள் அன்பு கிடைத்துவிட்டால் போதும்” என விஜய் கூறி இருக்கிறார்.