நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டார். தலைவா படத்திற்கு பிறகு பீஸ்ட் படத்திற்காக தான் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார்.
தலைவா படத்திற்கு முன் பல படங்களுக்கு தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார் விஜய். அப்படி போக்கிரி படத்திற்காக சன் டிவியில் விஜய் பேட்டி ஒன்றில் பங்கேற்று கொண்டார்.
பிடிக்காத நடிகர்கள்
அந்த பேட்டியில் விஜய்யிடம் பிடிக்காத நடிகர்கள் குறித்து கேள்வி கேட்டகப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஜய் ' எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும், ஒவ்வொரு நடிகர்களிடமும் ஒவ்வொரு விஷயம் பிடிக்கும். அதனால எனக்கு எந்த ஒரு நடிகரையும் பிடிக்காமல் போனது இல்லை ' என்று கூறியுள்ளார்.