மிகவும் முக்கியமானவருடன் மலேசியா கிளம்பிய நடிகர் விஜய்... யாருடன் பாருங்க, வீடியோ
ஜனநாயகன்
நடிகர் விஜய், சினிமா களத்தில் ஜெயித்தது போலவே இப்போது வேறொரு களத்தில் ஜெயிக்க முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், பாபி தியோர், பிரியாமணி என பலர் நடிக்க ஜனநாயகன் படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ளது.
2026ல் விஜய் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அவர் நடித்துள்ள ஜனநாயகன் படமும் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தியது என கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

வீடியோ
நாளை (டிசம்பர் 27) பிரம்மாண்டத்தின் உச்சமாக நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கப்போகிறது. நேற்று மலேசியாவிற்கு தமிழ் சினிமா கலைஞர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
தற்போது இன்று காலை நடிகர் விஜய் தனது தாயார் ஷோபாவுடன் மலேசியா கிளம்பி சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் தனது தாயாருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
