விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. மிகவும் பிரபலமான நடிகர்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. அரசியலில் இறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ள விஜய், ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள நடிகர்கள், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் நடிகர் விஜய் தனது சிறு வயதில் நடிகை ஸ்ரீவித்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஸ்ரீவித்யாவுடன் விஜய் மட்டுமல்ல வேறொரு நடிகரும் உள்ளார்.
அவர் யார் என்று கேட்டுதான் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய்யுடன் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுவன் வேறு யாருமில்லை, பிரபல நகைச்சுவை நடிகர் கணேஷ்தான். இந்த புகைப்படத்தை கணேஷின் மனைவியும் பிரபல நடிகையுமான ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.