நடிகர் விஜய்யின் எடை இவ்வளவு தானா ! முக்கிய பிரபலம் சொன்ன சுவாரஸ்ய தகவல்..
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார், அவரின் சாதனைகளை அவரே தான் முறியடிப்பார் என்ற மாஸ் நிலைக்கு வளர்ந்துள்ளார் விஜய்.
அதன்படி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இதற்கு முன் விஜய்யின் சர்கார் பட சாதனை தமிழ்நாட்டில் நம்பர் 1-ஆக இருந்தது.
மேலும் தற்போது பீஸ்ட் திரைப்படம் தான் நான்கு வருடங்களுக்கு முன் வெளியான சர்கார் பட சாதனையை முறியடித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ் பேட்டியொன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதில் விஜய் சார் எனக்கு 68 கிலோ தான், அவர் என்னை விட எடை குறைவு. எப்படி அவர் இப்போதும் இவ்வளவு இளைமையாக உள்ளார் என்பது தெரியவில்லை என சதிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் சதிஷ் விஜயுடன் பீஸ்ட், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.