GBU பட வெற்றி, நடிகை பிரியா வாரியருக்கு வாழ்த்து கூறிய விஜய்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்
குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி கடந்த 10ம் தேதி வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
தமிழில் இவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவே ஆகும். வெறித்தனமான காட்சிகள், ரெட்ரோ பாடல்கள், என தரமாக படத்தை ஆதிக் செய்திருந்தார்.
குறிப்பாக ரெட்ரோ பாடல்கள் ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டது. இதில், சிம்ரனின் சுல்தானா பாடலுக்கு கண்ணழகி பிரியா வாரியர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடனமாடி இருந்தார்கள்.
பாடலுக்கு ஏற்ப இவர்களின் நடனம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை பிரியா வாரியருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரியா வாரியர்
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரியா வாரியருக்கு விஜய் வாழ்த்துவது போன்ற வீடியோ ஒன்று அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதனால் அதிர்ச்சியில் பிரியா உறைந்துவிட்டார். ஆனால், விஜய் வாழ்த்து கூறுவது போன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோ ஏஐ மூலம் உருவானது என்று தெரிந்த உடன் பிரியா கண்கலங்கி விட்டார். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
