நடிகர் விஜயகாந்தின் தம்பி.. மதுரையில் ஏழ்மையில் இப்படி ஒரு தொழில் செய்கிறாரா?
சினிமா நடிகராகவும், அரசியல் தலைவராகவும் ஏராளமான ரசிகர்களை கொண்டவரான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
விஜயகாந்த் மதுரையில் ரைஸ் மில் உரிமையாளரின் மகனாக பிறந்தவர். அங்கிருந்து சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, அதன்பின் தனது திறமையை நிரூபித்து ஜெயித்தவர்.

சகோதரர்
நடிகர் விஜயகாந்த் உடன் பிறந்தவர்கள் 11 பேர். அவரது அப்பாவுக்கு 6 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள். விஜயகாந்த் சென்னையில் செட்டில் ஆன நிலையில், மற்றவர்களும் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
மதுரையில் இருக்கும் பூர்வீக வீட்டில் தற்போது விஜயகாந்தின் தம்பிகள் பால்ராஜ் மற்றும் செல்வராஜ் இருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
செல்வராஜ் அங்கு மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறாராம். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு தனது பூர்வீக வீட்டுக்கு செல்வதை குறைத்துக்கொண்டாராம்.
