கேப்டன் விஜயகாந்த் காலமானார்- கடும் துக்கத்தில் தமிழக மக்கள்
விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம். சினிமாவில் எப்போதும் தனக்கு நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டிய வண்ணம் இருப்பார்.
நிஜத்திலும் மற்றவர்களுக்கு ஓடிப்போய் உதவி செய்து பலரின் துயரங்களை தீர்தத கடவுளாக வாழ்ந்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டு மிக விரைவிலேயே எதிர்ககட்சி அளவிற்கு வளர்ந்த இவர் பின் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கினார்.
குணமடைந்து மீண்டும் அரசியல் களத்தில் இறங்குவார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சமீபத்தில் தான் வீடு திரும்பினார்.
தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த தகவல் வெளியாகி தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.