தேமுதிக அலுவலகத்தில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் பூத உடல்- அவரது புகைப்படம் பாருங்கள்
விஜயகாந்த்
புது வருடத்தை கொண்டாட இருந்த தமிழக மக்களுக்கு வந்த அதிர்ச்சிகரமான செய்தி தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு. மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் தற்போது அவரது கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் அவர்களின் பூத உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட இருக்கிறது.
இந்த நிலையில் தேமுதிக அலுவலகம் முன்பு லட்சக் கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளனர்.
அவரது பூத உடலுக்கு தேமுதிக கட்சி உடை அணியப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படம் வெளியாக மக்கள் கம்பீரமான அந்த முகம், பேச்சு இனி எப்போது கேப்டன் என வருத்தத்துடன் பதிவுகள் போட்டு வருகிறார்கள்.