100 முறைக்கு மேல் நடிகர் விஜயகாந்த் விரும்பி பார்த்த திரைப்படம்- இப்படிபட்ட ரசிகரா?
விஜயகாந்த்
தமிழ் சினிமா கடந்த வருடம் மிகவும் முக்கியமான நடிகர்களை இழந்திருக்கிறது. அதிலும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்த விஜயகாந்த் அவர்களின் உடல் டிசம்பர் 29ம் தேதி மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைந்ததில் இருந்து மக்களுக்கு தெரியாத அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அப்படி நடிகர் விஜயகாந்த் ரசித்து பார்த்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரசித்த திரைப்படம்
மதுரையில் ரைஸ் மில்லை நடத்தி வந்தபோது எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்தவர்தான் விஜயகாந்த். எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களையும் பார்த்து ரசித்தவர் சினிமாவில் ரஜினியின் வளர்ச்சியை பார்த்து அவருக்கும் நடிக்கும் ஆசை வந்துள்ளது.
பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் விஜயகாந்த் பேசும்போது, என் வீட்டுக்கு அருகே எங்க வீட்டு பிள்ளை படம் ஓடியபோது சண்டை காட்சிகளுக்காகவே 120 முறை அப்படத்தை பார்த்தேன்.
எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமாரி போன்ற படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் அதன்பின் அவர் படங்களில் இல்லையே என நினைத்தேன். அப்போது வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.
அந்த படத்தை 70 முறை பார்த்தேன். நானும் எம்.ஜி.ஆரின் ரசிகன் இல்லை.. வெறியன்’ என கூறினார்.

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
