ஆசையாய் கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறாமலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்- வீட்டின் புகைப்படம் இதோ
விஜயகாந்த்
மக்கள் மனதில் கேப்டனாக என்றும் வாழும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் இன்று நம்மோடு இல்லை.
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை (டிசம்பர் 28) உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் இப்போது தேமுதிக அலுவலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு தொண்டர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறதாம்.

புதிய வீடு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நபர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடக்காமல் இருந்த நிலையில் தற்போது தான் மீண்டும் வேலைகள் தொடங்கியிருக்கிறது.

90% வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் இவ்விழாவில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
10 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த வீட்டில் குடியேறாமலேயே விஜயகாந்த் அவர்கள் மறைந்துவிட்டார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    