நிச்சயதார்த்தம் நடந்து 4 வருடம் ஆகியும் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்காமல் இருப்பது ஏன்?
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டு மக்களை கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது, அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு வேறு எந்த வேலையும் பார்க்க முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுகின்றனர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்.
நேற்று தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் இப்போது தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி போல் அவரது உடல் அடக்கம் செய்ய தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது.
காலை முதல் பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மகனின் திருமணம்
நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன்.
இந்த திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டு அதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும், பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
