செத்தா கூட கேப்டன் விஜயகாந்த் சொன்ன விஷயம், இப்போது வைரல்- வீடியோவுடன் இதோ
விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முட்ங்கியபோது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வேண்டியது அவர் வீட்டில் இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் கோடாண கோடி மக்கள் வேண்டுதல் இன்று நிறைவேறாமல் போனது, விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா.. புகைப்படங்கள் இதோ
மியாட் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு உடல் சென்றுவிட்டது. வீட்டிற்கு முன் அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க கேப்டனை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என கூடி உள்ளனர்.
வைரல் வீடியோ
கம்பீரமான குரல் கொண்டு அவரது படங்களில் பேசிய வசனங்கள் படு பிரபலம், அதையும் தாண்டி அவர் தேமுதிக கட்சி மேடைகளில் பேசிய பேச்சுகளை யாராலும் மறக்க முடியாது.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசும்போது, என்னயா காசு காசுனு, போங்கயா நீங்களும் உங்க காசும். கோடி கோடியாய் சேத்து வெச்சு எங்கயா கொண்டு போக போறீங்க.
செத்தா கூட அரணாக்கொடியை கழட்டிவிட்டு தான் உள்ள கொண்டு போய் புதைக்கிறார்கள் என பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Powerful and memorable words..#RIPCaptain pic.twitter.com/F9A10HLQwf
— Ramesh Bala (@rameshlaus) December 28, 2023