குட்டி பிகில் உடன் மாஸ்டர் தளபதி விஜய், இணையத்தில் செம்ம ட்ரெண்டாகும் புகைப்படம், இதோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
கடந்த 13 ஆம் தேதி அன்று வெளியான மாஸ்டர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும் இப்படம் 200 கோடி வசூலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இதனிடையே பிகில் படத்தின் முடிவில் தளபதி விஜய்யிடம் தான் பிகில் போல இருக்க ஆசைப்படுவதாக ஒரு சிறுவன் கூறுவான். அதே சிறுவன் தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் அந்த சிறுவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..