முன்னணி இயக்குனருடன் மோதலில் நடிகர் விக்ரம்.. ரசிகர்களுக்கு எட்டா கனியாகும் எதிர்பார்ப்புக்குரிய படம்
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
இவர் நடிகர் விக்ரமை வைத்து இயக்கிவந்த படம் தான் துருவ நட்சத்திரம். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் சிம்ரன், ராதிகா சரத்குமார், தொலைக்காட்சி பிரபலம் டிடி ஆகியோர் நடிக்கின்றனர்.
பெரும்பாலான படப்பிடிப்பு கடந்த 2018-ம் ஆண்டே எடுத்து முடித்துவிட்ட நிலையில் finance பிரச்சினைகளால் மிச்ச படப்பிடிப்பு ஒத்திவைக்க பட்டிருந்தது.
ஆனால், மூன்று வருடங்கள் ஆகியும் இதுவரை படப்பிடிப்பு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதால் சமீபத்தில் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்து படத்தை முடிக்குமாறு நடிகர் விக்ரம் கேட்டுக்கொண்திருக்கிறார்.
ஆனால், இயக்குனர் கவுதமோ முதலில் டப்பிங்கை முடிக்கும்படி கேட்டுகொண்டதாகவும் அதில் விக்ரமிற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றும் பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.