இளம் நடிகர்களுக்கும் டப் கொடுத்து வரும் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு- இத்தனை கோடியா?
நடிகர் விக்ரம்
நல்ல கதை என்றால் என்னால் கடின உழைப்பு போட்டு எந்த எல்லைக்கும் சென்று நடிக்க முடியும் என்பதை காட்டியவர் நடிகர் விக்ரம். அதற்கு அவரது நிறைய படங்களை கூறலாம், ஒரே ஒரு படம் சொல்ல வேண்டும் என்றால் ஐ படம் தான்.
இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது எல்லாம் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. அப்பா சினிமா பிரபலம் என்பதால் ஈஸியாக என்டரீ கொடுத்த விக்ரம் ஒரு இடத்தை பிடிக்க பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளார்.
1990ம் ஆண்டு என் காதல் கண்மணி படத்தின் மூலம் அறிமுகமான இவரது திரைப்பயணம் இப்போது துருவ நட்சத்திரம் வரை வந்துள்ளது. இப்படம் எப்போதோ தயாராகிவிட்டது என்றால் சில பிரச்சனைகளால் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே வருகிறது.
அதேபோல் இப்படத்தை தொடர்ந்து விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சொத்து மதிப்பு
விக்ரம் தற்போது நடித்துவரும் படங்களுக்கு ரூ. 25 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
விக்ரம் சுமார் 150 கோடி சொத்துக்கு அதிபதி என கூறப்படுகிறது, ஆனால் இந்த சொத்து விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
