உடல்நிலை சரியில்லை என்றதும் வீடு தேடி வந்த ரசிகர்- விக்ரம் செய்த நெகிழ்ச்சியான செயல்
நடிகர் விக்ரம்
எப்படிபட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கேரக்டராக மாறி நடிக்க கூடிய கலைஞர்களில் ஒருவர் தான் விக்ரம்.
சோலோ ஹீரோவாக நடித்த கோப்ரா படு தோல்வியை சந்தித்தது, அதன்பிறகு அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது பொன்னியின் செல்வன்.
ஆதித்த கரிகாலனாக நடித்து விக்ரம் மிகச்சிறந்த நடிகர் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணமாக அமைந்துவிட்டது.
கடந்த சில வாரங்களாக பொன்னியின் செல்வன் 2 பட ரிலீஸ் வேலைகளில் படு பிஸியாக சுற்றி வந்த விக்ரம், அப்பட வேலைகள் முடித்த கையோடு தான் நடித்துவரும் தங்கலான் படப்பிடிப்பில் இணைந்துவிட்டார்.

ரசிகர் செய்த செயல்
பா.ரஞ்சித் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார், சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அண்மையில் இப்பட ஒத்திகையின் போது விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் விக்ரமின் தீவிர ரசிகரான சிவா என்பவர் வீட்டுக்கு சென்று கேட்டில் நின்றுகொண்டு விக்ரம் விரைவில் குணமடைய வேண்டும் என்ற பதாகையுடன் நின்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். உடனே அதற்கு நடிகர் விக்ரம், மிக்க நன்றி சிவா.
வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும் நான் மீண்டும் வருவேன் என பதில் டுவிட் செய்துள்ளார்.

முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்