பொன்னியின் செல்வன் புரொமோஷனிற்காக விக்ரம் அணிந்த வாட்ச் இத்தனை லட்சமா?
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் இந்த மாதம் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
அதற்காக படத்தில் நடித்த முக்கிய பிரபலங்கள் தொடர்ந்து புரொமோஷன் செய்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு இடத்திலும் மிகவும் ஜாலியாக படம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை கூறி நல்ல விதத்தில் புரொமோட் செய்கிறார்கள்.

விக்ரம் வாட்ச்
தற்போது பொன்னியின் செல்வன் 2 புரொமோஷன் போது விக்ரம் அணிந்திருந்த வாட்ச் ரசிகர்களிடம் அதிக ஈர்க்கப்பட்டுள்ளது.
அந்த வாட்ச் சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் தான் அது. Big Bang Meca-10 என்கிற வெர்ஷனை சேர்ந்த இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய் என்கின்றனர்.
இந்த வாட்ச் விலை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் என்றே கூறலாம்.

தனது மகனை கட்டியணைத்து அழும் நடிகை ராதிகா சரத்குமார்- ஏன் தெரியுமா?