சன் டிவி-யின் முக்கிய சீரியலில் நடித்திருந்த நடிகர் விமல் ! புகைப்படத்துடன் இதோ..
நடிகர் விமல் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர், இவர் நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அப்படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என பல வெற்றியடைந்த படங்களில் அவர் நடித்திருந்தார்.
இதனிடையே சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படமும் வரவேற்பை பெறவில்லை.
ஆனால் விமல் நடிப்பில் வெளியாகியுள்ள விலங்கு வெப் சீரிஸ் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்ப்பை பெற்று வருகிறது. சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ள அந்த வெப் சீரிஸ் குறித்து தான் கடந்த சில நாட்களாக பலரும் பேசிவருகின்றனர்.
இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் விமல் சன் டிவி-யின் முக்கிய சீரியல் ஒன்றில் நடித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் விமல் சன் டிவி-ல் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்திருக்கிறார்.
அந்த புகைப்படம் தான் இணையத்தில் பரவி வருகிறது..