மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த தேசிங்கு ராஜா 2 படம் குறித்து நடிகர் விமல்.. வெறித்தனமான அப்டேட்
தேசிங்கு ராஜா 2
பிரபல இயக்குநர் எழில் இயக்கத்தில் 'தேசிங்குராஜா' என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் விமல். இப்படம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாகமான தேசிங்குராஜா 2 படம் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தில் இருந்த வித்தியாசமான கதைக்களத்திலும், காமெடி கலந்த கதைக்களத்திலும் தற்போது இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விமல் உடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நடிகர் விமல் வாழ்த்து தெரிவித்து 'தேசிங்கு ராஜா 2' படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
மேலும், அப்படம் குறித்து அதிரடி அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதாவது, பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் தேசிங்கு ராஜா 2 படம் கோடை கால விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.