தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் வினீத் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்
நடிகர் வினீத்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய சில நடிகர்களை நாம் மறந்திருக்க மாட்டோம், அப்படி இப்போதும் நமது நியாபகத்தில் இருக்கும் பிரபலம் தான் நடிகர் வினீத்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து தனக்கென ரசிகர்களை கொண்டவர்.
ஆவாரம் பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
அதன்பிறகு ஜாதிமல்லி, காதல் தேசம், சிம்ம ராசி, சுயம்வரம், வேதம், பிரியமான தோழி, உளியின் ஓசை என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். சிறந்த நடிகர் என்பதை தாண்டி வினீத் பரதநாட்டிய கலைஞராக சிறந்து விளங்கியவர்.
நடிகர், நடனம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடன இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.
நடிகரின் குடும்பம்
நடிகர் வினீத் 2004ம் ஆண்டு ப்ரிசில்லா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். தற்போது வினீத் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,