இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விஷாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் கருப்பாக இருந்து ஹீரோவாக கலக்கிய நடிகர்களுக்கு நடுவில் செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விஷால்.
அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தவர் கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்தார்.
கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கதைக்களத்தை மையமாக கொண்டு விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் படக்குழு எதிர்ப்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் விஷால், ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்தார், ஆனால் படம் மார்க் ஆண்டனி படம் கொடுத்த அளவு மிகப்பெரிய வெற்றியை காணவில்லை.
இந்த வருடம் விஷால் நடிப்பில் தயாராகி கிடப்பில் போடப்பட்ட மதகஜ ராஜா படம் 12 வருடங்களுக்கு பிறகு வெளியாக மிகப்பெரிய வெற்றியை கண்டது.
சொத்து மதிப்பு
இன்று நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த ஸ்பெஷல் தினத்தில் விஷால், தனது காதலியும் நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகர் விஷாலின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஒரு படத்துக்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறும் விஷாலின் சொத்து மதிப்பு ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.