திடீரென சைக்கிளில் கோவிலுக்கு வந்த நடிகர் விஷால்.. அவரே சொன்ன காரணம்
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜராஜா படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
படம் லேட்டாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைத்து இருப்பது, கிடப்பில் இருக்கும் மற்ற பல படங்களுக்கு உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது. கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் உட்பட பல படங்களும் அதனால் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
சைக்கிளில் வந்த விஷால்
இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது இரவில் திடீரென சைக்கிளில் சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்.
மதகஜராஜா படம் வெற்றி அடைந்தால் நான் ஒரு விஷயத்தை செய்வதாக வேண்டி இருந்தேன். அதை செய்ய தொடங்கிவிட்டேன் என்பதை சொல்ல தான் கோவிலுக்கு வந்தேன் என விஷால் பேட்டி கொடுத்து இருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
