இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகர் விஷ்ணு விஷால்- திருமண தேதி இதோ
நடிகர் விஷ்ணு விஷால் தரமான படங்களாக தமிழ் சினிமாவில் கொடுத்து வருபவர்.
வெண்ணிலா கபடி குழு என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் நீற்ப்பறவை, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் என நிறைய நல்ல படங்கள் கொடுத்துள்ளார்.
இவரது சொந்த வாழ்க்கை என்று பார்த்தால் தனது நீண்டநாள் தோழியான ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார், ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனையால் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன்பின் நடிகர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போகிறார் என நிறைய செய்திகள் வந்தன.
இந்த நிலையில் விஷ்ணுவே தனது திருமண செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கும் கட்டா ஜுவாலா என்பவருக்கு வரும் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.
LIFE IS A JOURNEY....
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) April 13, 2021
EMBRACE IT...
HAVE FAITH AND TAKE THE LEAP....
Need all your love and support as always...@Guttajwala#JWALAVISHED pic.twitter.com/eSFTvmPSE2