கடைசியாக ஒரு முறை.. மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்காக வியட்நாமிலிருந்து வந்த நடிகர்!
ரோபோ ஷங்கர்
ஸ்டாண்ட் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் பிரபலமான இவர் விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் தனி இடத்தை பிடித்தார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தான் குணமாகி மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கினார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார்.
ரோபோ ஷங்கருக்கு நட்பு வட்டம் மிகவும் பெருசு. இதன் காரணமாக அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டுமென்பதற்காகவே தன் வெளிநாட்டு நிகழ்ச்சியைப் பாதியில் முடித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் நடிகர் சாய் சக்தி.
கடைசியாக ஒரு முறை!
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் டிவியில் நுழைந்த காலத்தில் இருந்தே அவரைத் தெரியும். பல டிவி நிகழ்ச்சிகளில் அவர் கூட ஒர்க் பண்ணியிருக்கேன். ஜாலியாக கலாய்ப்பார், அதேநே
ரம் ஒரு அண்ணனாக அன்பு காட்டுவார். பர்சனல் பிரச்சனை குறித்து அவரிடம் கூறினால் அதை சரிசெய்ய யோசனை சொல்வார்.
அவரது இறுதி சடங்கின்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அவரை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்பதற்காக பாதியில் சென்னை வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.