ஷங்கரின் பாய்ஸ் படம் என் வாழ்க்கையை மாற்றியது- நடிகர் யஷ்
நடிகர் யஷ்
யஷ் இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்.
இவர் நடித்த கே ஜி எப் படத்தின் வெற்றி குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, கன்னட சினிமாவையே திருப்பி போட்ட படம், அதோடு ரூ 1000 கோடி கிளப்பில் இணைந்த படம்.

இதை தொடர்ந்து யஷ் டாக்சிக் படத்தில் நடித்தார், இந்த படமும் ரூ 1000 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்த்த நிலையில் ரூ 350 கோடி வசூல் செய்து படுதோல்வி அடைய, சில மாதங்களிலேயே துறைப் ராமயணா படத்தில் ராவணானாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து கம்பேக் கொடுத்துவிட்டார்.
முக்கிய படம்
ராமாயண படத்தில் எல்லோரையும் விட ஸ்கோர் செய்தது யஷ் தான், இந்நிலையில் யஷ் தன்னிடம் சொன்னதாக ஒரு தகவலை ஏ எம் ரத்னம் பகிர்ந்துள்ளார்.

அதில், யஷ், ஷங்கர், நான் எல்லாம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றோம், அப்போது யஷ் ஷங்கரிடம் வந்து, சார் உங்க பாய்ஸ் படம் பார்த்து ஹீரோ ஆகனும் என்று வீட்டை விட்டு கிளம்பிவிட்டேன் சார், நான் ஹீரோவாக நீங்களும் ஒரு காரணம் என்று அவர் சொன்னதாக ரத்னம் கூறியுள்ளார்.