காமெடியனாக அறிமுகமாகி கலக்கும் நடிகர் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
யோகி பாபு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களில் நடித்து டாப் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் தொடங்கிய இவரது பயணம் 2009ம் ஆண்டு வெள்ளத்திரையில் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தின் மூலம் ஆரம்பமானது.
அதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.
சொத்து மதிப்பு
ஒருகாலத்தில் சந்தானம் காமெடி இல்லாமல் எந்த ஒரு பட ரிலீஸும் இல்லை என்ற காலம் மாறி இப்போது யோகி பாபு இல்லாமல் புதுபட ரிலீஸ் இல்லை என ஆகிவிட்டது.
ஒரு படத்திற்கு சுமார் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு ரூ. 40 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
