நடிகர் யூகி சேதுவின் வாழ்க்கை வரலாறு..

By Kathick Jan 13, 2024 05:00 AM GMT
Report

யூகி சேது 

திரையுலகில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் யூகி சேது. இவர் திரைப்படங்கள் குறித்தான முனைவர் பட்டம் பெற்றவர். இதனால் முனைவர் யூகி சேது என்றும் அழைக்கப்படுகிறார்.

நடிகர் யூகி சேதுவின் வாழ்க்கை வரலாறு.. | Actor Yugi Sethu Biography In Tamil

நடிகர் யூகி சேதுவின் இயற்பெயர் பெயர் சேதுராம் ஆகும். இவர் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம், ரமணா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பு - சினிமா வாழ்க்கை

சென்னையில் பிறந்த இவர், திரைப்பட இயக்கத்திற்கான பட்ட படிப்பில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இவருடைய முதல் குறும்படம் 1984ம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றுள்ளது.

நடிகர் யூகி சேதுவின் வாழ்க்கை வரலாறு.. | Actor Yugi Sethu Biography In Tamil

மேலும் 1987ல் கவிதை பாட நேரமில்லை என்ற படத்தினை யூகி சேது இயக்கினார். இதன்பின் 1991ஆம் ஆண்டு மாதங்கள் ஏழு என்ற படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார்.

கமலஹாசனின் படங்களான பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் போன்ற படங்களிலும், ரமணா படத்திலும் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகர் யூகி சேதுவின் வாழ்க்கை வரலாறு.. | Actor Yugi Sethu Biography In Tamil

முதல் நாள் கேப்டன் மில்லர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் கேப்டன் மில்லர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த ஒரு படங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் இவருடைய நகைச்சுவை செய்யும் விதம் வித்தியாசமான ஒன்றாக அமைந்தது இவருடைய பிரபலத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஸ்பான்டேனியஸாக இவர் அடிக்கும் காமெடி நம்மை மறந்து சிரிக்க வைக்கும். 

யூகி சேது எழுதி, இயக்கிய முதல் படமான 'கவிதை பாட நேரமில்லை' 1987ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வரும் 'காதல் என்ன காதல்' என்ற பாடல் உதடுகள் ஒட்டாமலே பாடுவதாக எழுதப்பட்டது.

நடிகர் யூகி சேதுவின் வாழ்க்கை வரலாறு.. | Actor Yugi Sethu Biography In Tamil

1984ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை துவங்கிய யூகி சேது தற்போது வரை தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். அந்த அளவிற்கு 90ஸ், 2K மற்றும் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்க கூட கலைஞர் தான் யூகி சேது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US