பூ போல மனசு, ஏறாத வயசு.. தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

By Parthiban.A Jun 22, 2022 09:20 AM GMT
Report

நடிகர் விஜய் இன்று அவரது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் பிறந்தநாளுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

"பூ போல மனசு, ஏறாத வயசு, கோலிவுட்டின் வாரிசு, The name is தளபதி" என நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்தி இருக்கிறார்.

இயக்குனர் நெல்சன் அவரது ட்விட்டில் "விஜய் சார், உங்கள் எளிமை, தன்னடக்கம், தன்னம்பிக்கை ஆகியவை வியக்க வைக்கிறது. நண்பராக, சகோதராக, நலம் விரும்பியாக இருப்பதற்கு நன்றி" என குறிப்பிட்டு இருக்கிறார்.

"எங்களுக்கு வழி வகுத்து கொடுத்ததற்கும், நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி" என நடிகர் தனுஷ் குறிப்பிட்டு உள்ளார்.

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மேலும் பல பிரபலங்களின் வாழ்த்து ட்விட்கள் இதோ.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US