பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது ஏன்?- முதன்முறையாக கூறிய நடிகை அபிராமி
நடிகை அபிராமி
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் பெரிய ஹிட் கண்ட நடிகை அபிராமி.
மலையாளத்தில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் வானவில், சமுத்திரம், சமஸ்தானம், விருமாண்டி வரை நடித்து பின் நீண்ட இடைவேளை எடுத்தார்.
அதன்பின் மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய இவர் இப்போது பல மொழிகளில் நடிக்கிறார்.
குழந்தை தத்தெடுப்பு
ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் அபிராமி செட்டில் ஆகியிருந்தார். பின் கடந்த வருடம் நடிகை அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மகளுக்கு கல்கி என்றும் பெயர் வைத்தார்.
மகள் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன்.
மகளுக்கு அப்படி ஏன் பெயர் வைத்தேன் என்றால் கல்கி ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன், பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.