குட் பேட் அக்லி படத்தை பார்க்க நேரம் இல்லை.. நடிகை லைலாவின் பேச்சால் பரபரப்பு
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பரபரப்பு
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடிகை லைலா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். திரில்லர், கிரைம் போன்ற கதையில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது 'என்கவுன்ட்டர்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறேன். நேரம் இல்லாததால் இன்னும் குட் பேட் அக்லி படத்தை கூட பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.